தூத்துக்குடியில் மாநில அளவிலான மினி மாரத்தான் - எஸ்.பி பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!


தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி சார்பாக நடைபெற்ற  மாணவியருக்கான மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன்   கொடியசைத்து துவக்கி வைத்து ‘காவல் உதவி” செயலி குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி சார்பாக இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான மினி மாராத்தான் போட்டியில் சுமார் 1000 மாணவியர்கள் கலந்து கொண்டு

ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரியிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி, கருத்தபாலம், புதிய பேருந்து நிலையம், சிட்டி டவர் ஜங்கசன் வழியாக வந்து மீண்டும் ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரியில் நிறைவு செய்தனர். 

இந்த மினி மாராத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கொடி அசைத்து துவக்கிவைத்து ‘காவல் உதவி” செயலி குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி தலைவர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் முனைவர் மீனாகுமாரி, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் அனிஸ்டா மற்றும் கல்லூரி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post