மகாகணபதி திருக்கோயில் அண்ட் டிரஸ்ட் நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர்  செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளியம்பாளையம் கிராமத்தின் மகாலட்சுமி நகரில் பொதுமக்களின் பங்களிப்புடன் புதியதாக கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள அருள்மிகு மகாகணபதி திருக்கோயிலின் மகாகும்பாபிசேகம்  மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இக்கோவில் நிர்வாகத்திற்காகவும், எதிர்கால திருப்பணிகள் முறையாக நடைபெறுவதற்காகவும் டிரஸ்ட் புதியதாக உருவாக்கி அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான பொதுக்கூட்டம் கோவில் வளாகத்தில்  துவங்கி நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் கோவில் திருப்பணிகளுக்காக திருக்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்து தொடர்ந்து கோவில் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. மேலும், அருள்மிகு மகாகணபதி திருக்கோயில் எதிர்கால திருப்பணிகளுக்காகவும், நிர்வாகப் பயன்பாட்டிற்காகவும் புதியதாக அருள்மிகு மகாகணபதி திருக்கோயில் அண்ட் டிரஸ்ட் என்ற பெயரில் புதியதாக டிரஸ்ட் உருவாக்கி அதற்கான பொறுப்பாளர்களை தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, அருள்மிகு மகாகணபதி திருக்கோயில் அண்ட் டிரஸ்ட் தலைவராக ரகுபதி, செயலாளராக விஷ்ணு குமார், பொருளாளராக சாந்தி ஸ்ரீனிவாசன், போட்டியின்றி ஒருமனதாக அனைவராலும் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து துணைத்தலைவராக ஆர்.வடிவேல்(ஸ்தபதி), விஜயகுமார், ஆறுமுகம்(நந்தகுரு), இளையராஜா, இளங்கோவன், ஆகியோர்களும், துணைச் செயலாளர்களாக சதீஸ் குமார், அரங்கநாதன்(ரகு), சிலம்பரசன், முருகன், மாதேஸ்வரன், சோபன்பாபு, ஆகியோர்களும், செயற்குழு உறுப்பினர்களாக பூசைமணி, கருப்பசாமி, விஜயன், மாரிமுத்து ஆகியோர்களும் ஒருமனதாக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்பொதுக்கூட்டத்தில் மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நலசங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மகாராஜன். பொருளாளர் கணேசன் மற்றும் மகாலட்சுமி நகர் வாழ் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுக் கூட்டத்தின் நிறைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் எதிர்வரும் சித்திரை திருநாள் 14.04.2022 முதல் சம்பந்தப்பட்ட பதவிகளில் பொறுப்பேற்று தொடர்ந்து 3 ஆண்டுகள் பொறுப்புகளை நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டது.

Previous Post Next Post