தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும் இணைந்து, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வனத்தில் கால்நடைகளை மேய்க்க தடை வழங்கிய தீர்ப்பு ஆண்டாண்டு காலம் மலை மற்றும் வனம் சார்ந்த பழங்குடி ஆதிவாசி இன மக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கால்நடைகளை வளர்க்க வனம் சார்ந்த மேய்ச்சல் நிலங்களை பயன்படுத்தி வருவதற்கு எதிராக அமைவதால், இந்த தீர்ப்பை திருத்த கோரி, தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுடன், சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக மலைவாழ் மக்கள் சங்க மலை வட்டாரக் கமிட்டி தலைவர் பி.சடையப்பன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில் விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த க.இரா. திருத்தணி காசலம், வாசுதேவன், மலைவாழ் மக்கள் சங்கத்தை சார்ந்த ராஜப்பன், தங்கவேல், எம்.சடையலிங்கம், தாயாலம் மாள், சி.பி.எம் மலைக்கமிட்டி செயலாளர் துரைசாமி, கே.எம்.விஜயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிறைவாக தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவிந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக பழைய பஸ் நிலையம் முன்பிருந்து விவசாயிகள், மலைவாழ் மக்கள் என 150க்கும் மேற் பட்டோர் ஆடு, மாடுகளுடன் ஊர்வலமாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர.