பீ.டி.ஓ தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு ஆலோசனை கூட்டம்

    கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு  மே1  நடைபெற இருக்கும் கிராம சபை பற்றிய ஆலோசனைக் கூட்டம்  மாலை 3மணி அளவில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி, தண்டபாணி, ஆகியோர் தலைமை தாங்கினர் . அப்போது பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை கூட்டம் காலை 10 மணிக்குள் தொடங்கி விடவேண்டும் என்றும் ஆவாஸ்பிளஸ் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின்படி 2016-2018 வரை எத்தனை பயனாளிகள் அந்தந்த  ஊராட்சிகளில் பயன் அடைந்துள்ளனர் என்பதை விளக்கிகூரவேண்டும் கிராம சபை கூடத்தில் கலந்து கொண்டவர்களில் ஆண்கள் எத்தனைபேர் பெண்கள் எத்தனை பேர் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.  3  ஊராச்சிகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கபட்டுள்ளார் என்றும் ஊராட்சி தலைவர்கள் கிராமசபை கூட்டம் நடத்தி  புகைப்படம் எடுத்து பத்திரிக்கை செய்தி வெளியிட வேண்டும்   என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி  தெரிவித்தார்.

ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள இருப்பு தொகைகளை விளக்கிக்  கூறினார் .ஊராட்சி தலைவரிடம் குறைகளை கேட்டறிந்தார் . கேட்டபின் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள குறைகளை முடிந்தவரை நிறைவேற்றி தருவதாக  வாக்குறுதி அளித்தார் . இதில்  ஊராட்சிமன்றதலைவர்கள்,செயலர்கள், அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post