மரங்களை வெட்டி வீழ்த்தி சுடுகாட்டில் சுகாதார மையம் அமைக்க முயன்ற திருப்பூர் மாநகராட்சி: பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்

 திருப்பூர் முருங்கப்பாளையத்தில் சுடுகாட்டில் சுகாதார மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். 


 திருப்பூர்  மாநகராட்சிக்குட்ப்பட்ட 27 வது வார்டில் உள்ள முருங்கப்பாளையம் சுடுகாடு நூற்றாண்டு காலமாக அந்த பகுதி பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து  பொதுமக்கள் அந்த பகுதியில் இறந்தவர்களை இங்கு கொண்டு வந்து புதைப்பது வழக்கம். இந்த சுடுகாட்டில் நூற்றாண்டு கடந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. இது தவிர 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்கள் உள்ளன.

இந்த நிலையில் இந்த சுடுகாட்டின் உள் பகுதியில் சுகாதார நிலையம் கட்டுவதாக கூறி இரவோடு இரவாக 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்கள் இரண்டினை வேரோடு வெட்டி வீழ்த்தி விட்டு, அஸ்திவாரத்துக்கு குழி தோண்டப்பட்டதாக குற்றம் சாட்டி பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 
அப்போது எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., கூறுகையில்: முருங்கப்பாளையம் சுடுகாடு நூறாண்டுகளுக்கும் மேல் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாகவும், இங்கு பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்திலேயே சுகாதார மையம் அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்டி இருக்கிறார்கள். மேலும் இங்குள்ள மரங்களையும் வேரோடு வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. 

மேலும் அருகிலேயே பங்களா ஸ்டாப்பில் மாநகராட்சி சுகாதார மையம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுகாதார மையம் தேவையில்லை. இந்த சுடுகாட்டை தொடர்ச்சியாக சுடுகாட்டு பயன்பாட்டுக்கே உறுதி செய்ய வேண்டும். மேலும், வேறு பகுதியில் சுகாதார நிலையத்தை கொண்டு சென்று அமைக்க வேண்டும். ச் என்றும் கூறினார். 
 இதை வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி கமிஷனரிடமும் மனு அளிக்கப்பட்டது. 
Previous Post Next Post