இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் பீஸ்ட் படத்தை தடை செய்ய வலியுறுத்தி தியேட்டரை முற்றுகையிட சென்ற எஸ்.டி.பி.ஐ., அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர். பஷீர் அஹமது தலைமையில் ஸ்ரீ சக்தி தியேட்டரை முற்றுகையிட கிளம்பினர்.
திருப்பூர் வளம் பாலம் பகுதியிலிருந்து 50க்கும் மேற்ப்பட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் வந்தபோது அவர்களை பாலத்தின் மேல் வைத்து தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து செனறனர்.
போராட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் இதயத்துல்லா, மாவட்டச் செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் ஜாபர் சாதிக், மாவட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று கைதாகினர்.