ஆன்மீக வழியாக கொரோனா பெருந்தொற்று உலகை விட்டு நீக்க தனுஷ்கோடி அரிச்சல்முனையில் ஆயிரம் தாய்மார்கள் கையில் தீபம் ஏந்தி கூட்டு பிராத்தனை.


இராமேஸ்வரம் ஏப் 10,

கொரோனா பெருந்தொற்று உலகைவிட்டு நீங்கவும், உலக நன்மை வேண்டியும் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையில் சூரிய உதயத்தின் போது  ஆயிரம் தாய்மார்கள்; கையில் விளக்கு ஏந்தி கூட்டு பிராத்தனை செய்தனர்.

மகாராஷ்ட்டிரா மாநிலம் கோலப்பூரில் தலைமையிடமாக கொண்டு இயங்கும்  ஆன்மீக கல்வி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் 'ராம தாண்டவ மந்திரம்'  என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இதில்  ஆயிரகணக்கான  தாய்மார்கள் தங்களது கைகளில் விளக்குகளை ஏந்தி உலகை விட்டு கொரோனா நீங்கி, உலக நன்மை வேண்டி  கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஆன்மீக கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மாதுரி சகஸ்தர பத்தே என்பவர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்  ஆன்மீக பயனமாக 39 நாடுகளுக்குள் சென்றுள்ளதாகவும், கொரோனா பெருந்தொற்றை ஆன்மிகத்தின் வழியாக இவ் உலகில் இருந்து நீக்க முடியும் எனவும், உலக நன்மை வேண்டி குழந்தை பெற்ற தாய்மார்கள் ஆயிரம் பேர் தனுஸ்கோடி அரிச்சல்முனை தூண் அமைந்துள்ள பகுதி சிவலிங்கம் வடிவில் இருப்பதால் அங்கு ராம நவமி தினத்தன்று சூரிய உதயத்தின் போது கைகளில் விளக்கு ஏந்தி பூஜை செய்து கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்த கூட்டு பிரத்தனையால் நிச்சயம் கொரோனா இவ்உலகைவிட்டு கொரோனா நீங்கி உலக நன்மை உண்டாகும் என இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தரபிதேசம், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து  சுமார் ஆயிரம்  தாய்மார்கள் ராமேஸ்வரம்  வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post