திட்டக்குடி அருகே டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் கொண்டாடினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் 131-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் நிறுவனர் தயா.பேரின்பம் தலைமை தாங்கினார்.




மாநில பொருளாளர் பாண்டுரங்கன் மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார் கள். முடிவில் மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். இதில் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post