தாளவாடி வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்

   ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில்  புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசிக்கின்றன. தற்போது காட்டு யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. 

இந்த நிலையில் தாளவாடி சிக்கள்ளி இடையிலான வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்ற காட்சியை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது காட்டு யானைகள் கூட்டமாக அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Attachments area
Previous Post Next Post