மீனவர்கள் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்

மீனவர்கள் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதங்கள்

நடைபெற்று வரும் நிலையில், இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை துறைகள் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து, மீனவர்கள் எளிதில் வங்கி சேவையை பெற மீனவர்கள் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மீன்வளம் மற்றும் கால்நடைத் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

1.மீன்களை கையாள்வதற்கு பனிகட்டி உற்பத்தி நிலையங்கள், குளிர்பான கழகங்கள், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிட 393 பயனாளிகளுக்கு ரூ.24.54 கோடி மானியம் வழங்கப்படும்.  

2. அயிரை மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த அயிரை மீன் ஆராய்ச்சி மையம் ரூ. 2.9 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

3. சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரையில் ரூ. 50 கோடி மதிப்பில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும்.

4. நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் ரூ.81 கூடுதல் கோடியில் வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

5. குளச்சல் துறைமுகம் ரூ. 40 கோடி செலவில் தூர்வாரப்படும்.

6.திருநெல்வேலியில் வண்ணமீன்கள் காட்சியகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

7.தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்க 245 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்க ரூ. 85.53 கோடி ஒதுக்கீடு.

8. 37 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு ரூ. 25 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

9.வள்ளலார் 200வது பிறந்த நாளை முன்னிட்டு ரூ. 25 கோடியில் 'வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' துவங்கப்படும் என தெரிவித்துள்ளார்

கால்நடைத்துறை முழு அறிவிப்புகள்: கிளிக் செய்யவும்

https://cms.tn.gov.in/sites/default/files/documents/ah_t_pn_2022_23.pdf

Ahamed

Senior Journalist

Previous Post Next Post