தமிழக பாஜக மருத்துவ அணி சார்பில் பம்மலில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பாஜக மருத்துவ அணி சார்பில் இலவச பல் நோக்கு மருத்துவ முகாம்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு பாஜக மாவட்டத் தலைவர் வேதசுப்பிரமணி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை குழந்தைகள் நல மருத்துவம் இருதய மருத்துவம் மகளிர் மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவம் கண் மருத்துவம் தோல் மருத்துவம் நுரையீரல் மருத்துவம் மனநல மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இதில் பம்மல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர் மேலும் இதில் பங்கு பெறும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் மருந்து மாத்திரைகள் அனைத்தும் வழங்கப்படுவதுடன் மேல் சிகிச்சைக்கு தேவைப்படும் என்றால் அவர்களுக்கு முழு செலவையும் பாஜக மருத்துவ அணி ஏற்கும் என்று தெரியப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாஜக தமிழக மருத்துவ அணி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் கே செந்தில் மாநில செயலாளர் டாக்டர் கோபி அய்யாசாமி பாஜக பம்மல் நகர தலைவர் ஆர் கோகுல் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post