இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து இளம் நீச்சல் வீரர் அன்சுமான் ஜிங்ரான் சாதனை

16 வயதான அன்சுமான், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே 30 கிலோமீட்டர் கடலில் வெறும் 9 மணி நேரம் 49 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே 30 கிலோமீட்டர் கடலில் உள்ள  பாக் ஜலசந்தியைக் கடப்பதைக் குறிக்கோளாக கொண்ட நீச்சல் வீரர் அன்ஷுமான் ஜிங்ரான் 9 மணி நேரம் 49 நிமிடத்தில் தனுஷ்கோடி வந்தடைந்தார்.  

இந்நிலையில் திறந்த நீர் கடல் நீச்சலை அன்சுமான் ஜிங்ரான் முடித்ததால், இது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு வட இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து அன்சுமான் கடலில் இறங்கி, இந்தியாவின் ராமேஸ்வரம் தனுஷ்கோடி நோக்கி கடல் வழியாகச் நீச்சல் அடித்து வந்தார். அவருடன் அவரது தந்தை சந்தீப் ஜிங்ரான், பயிற்சியாளர்கள் கோகுல் காமத் மற்றும் அமித் அவலே ஆகியோருடன் ஒரு மருத்துவர் மற்றும் உயிர்காப்பாளர்கள் அடங்கிய துணைக் குழுவும் வந்தது.  இந்த சாதனையை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பார்வையாளர்  உறுதிப்படுத்தினார். மாணவரின் இந்த முயற்சிக்கு  முத்தூட் ஃபைனான்ஸ் ஆதரவளித்து அவரது சாதனையை பாராட்டும் வகையில் இராமேஸ்வரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முத்தூட் ஃபைனான்ஸ் தமிழ்நாடு தென் மண்டலத்தின் மண்டல மேலாளர் ஸ்ரீகாந்த் என்.எஸ்., முத்தூட் ஃபைனான்ஸ்  சிவகங்கையின் மண்டல மேலாளர் பி.ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர.

Previous Post Next Post