வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி அவர்கள் முன்னிலையில், நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், மற்றும் கெங்கையம்மன் திருவிழா முன்னிட்டு ஆலோசனை சிறப்புக் கூட்டம் 36,வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து அவரவர்கள் வார்டில் என்ன என்ன குறைகள் உள்ளதோ அத்தனையும் நகர மன்ற தலைவர் அவர்களிடம் குறைகளை கூறினார்.
இக்கூட்டத்தில் நகர மன்ற கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் அவர்கள்இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கங்கை அம்மன் திருவிழா முன்னிட்டுநடைபெற உள்ள பொதுமக்கள் ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோயிலுக்கு மக்கள் சுமார் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். ஆகையால் நகரத்தை சுற்றியும் கோயிலைச் சுற்றியும் ஆங்காங்கே சோடியம் விளக்கு இருந்தும் பயனில்லாமல் இருக்கிறது. ஆகையால் சோடியம் விளக்குகளை சரி செய்து தரும்படி அவர் கூறினார். அதற்கு பொறியாளர் சிசில் தாமஸ் தகவலை ஏற்றுக்கொண்டு சரி செய்து தருகிறேன் என கூறினார் நகராட்சி துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி கூறியது அதாவது தினசரிபுவனேஸ்பரி பேட்டையிலிருந்து நெல்லூர்பேட்டைக்கு வருவதற்குள் போக்குவரத்து அதிகம் நெரிசல் உள்ளதால் மிகவும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
ஆகையால் போக்குவரத்தை சரி செய்து தரும்படி அவர் கூறினார், கவுன்சிலர் அரசு கூறியதாவது கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்காக பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்குகாந்திசவுக் அருகாமையில் உள்ள எஸ். கே. நகர் .பகுதியில் பஸ் நிலையம் அமைத்து தந்தாள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார், அதை ஏற்றுக்கொண்டு நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் அவர்கள் கூறியதாவது வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுவாக எழுதி கொடுத்து உத்தரவை பெற்றுக்கொண்டு சரிசெய்யலாம் என்று கூறினார்.இந்த கெங்கையம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு சிறப்பு ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.