தேனிமாவட்டம் மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நாட்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.காலை 10 மணிக்கு துவங்கும் சுட்டெரிக்கும் வெயில் நேரம் ஆக ஆக அதிகரித்தது 100 டிகிரி பாரன்கீட் மற்றும்; அதற்கு மேல் சென்று மாலை 4 மணிவரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கிறது . இதனால் ஆண்டிபட்டி சாலைகளில் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறதுஇந்நிலையில் நண்பகலில் வீசும் அனல்காற்று ஆபத்திலிருந்து ஆண்டிபட்டி மக்களை காப்பதற்காக அதிமுகவினர் ஆண்டிபட்டி வைகை அணை சாலைப்பிரிவில் எம்.ஜி.ஆர் சிலை முன்பு நீர் மோர் பந்தலை திறந்து உள்ளனர் .ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன் மற்றும் வரதராஜன் ஆகியோர் திறந்து வைத்து நீரையும் மோரையும் இலவசமாக வழங்கினார்கள்.
மேலும் இன்றைய துவக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்க குளிர்ச்சிதரும் தர்பூசணி பழங்களை வழங்கினார்கள் . இந்நிகழ்ச்சியில் தேனி மதுரை சாலையில் நடந்தும் வாகனங்களிலும் சென்ற பொதுமக்கள் தர்பூசணிபழங்களை பெற்று மோர் அருந்தி மகிழ்ச்சியுடன் சென்றனர்இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் செயற்பாடுகளும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலமுருகன் ,மலர்விழி பொன்முருகன், உமா மகேஸ்வரி மணிகண்டன், கலாவதி செல்வம் பால குமாரி கண்ணன் ,மாவட்ட மாணவரணி பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் சாம்சன், வீரகுமார், கவிராஜன், அருண்மதி கணேசன் ,வடிவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதிமுகவினரின் நீர் மோர் பந்தல் ஆண்டிபட்டி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.