தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கே. வி. குப்பம் பேருந்து நிலையம் அருகில் வட்ட கிளை தலைவர் ரகுநாதன் தலைமையில் வட்ட கிளை செயலாளர் சா கலையழகன், உமாபதி, ராஜேந்திரன், கருணாநிதி, புஷ்பராஜ், சுந்தரமூர்த்தி முன்னிலையில் இந்த ஆர்பாட்டம் நடை பெற்றது இதில் எஸ். பச்சையப்பன், வி. நாராயணன் மற்றும் சிறப்பு அழைப்பாரக நாராயணசாமி, ஞானசேகரன் கலந்துகொண்டு உரையாற்றும் போது 24-3-2022 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில சங்கத்தின் முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
நமது சங்கத்தினருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ செலவை திரும்பபெற அளிக்கப்பட்ட மனுகளில் நிலுவையில் உள்ள 20000 க்கும் மணுக்கள் மீது தீர்வு காண வேண்டும். தேர்தலின் போது ஓய்வூதியர் அரசு ஊழியர்கள் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியம் பெற வயது 80 இருந்து 70 ஆக குறைத்து 10/- வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி. வருவாய். ஊராட்சி செயலாளர்கள். வனகாவலர். உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும். 1-4-2003 முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் திட்டம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.