தூத்துக்குடியில் நரிக்குறவ மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா - மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் - கனிமொழி கருணாநிதி எம் பி வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன்,  மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 


நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதாஜீவன்,மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியில் கழக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு நரிக்குறவ இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் தையல் எந்திரம் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.


முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.33 இலட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட இரண்டு கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு  கனிமொழி கருணாநிதி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.மார்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post