அதிமுக அமைப்பு தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட அமைப்புத் தேர்தலை நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணைத் தலைவர் முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்தை
தொடர்ந்து இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடத்த தலைமை கழகத்தால் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜலெட்சுமி மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி ஆகியோர் தலைமையில்
முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான S.P சண்முகநாதன் முன்னிலையில் தூத்துக்குடி தனியார் ஹோட்டலில் வைத்து மூன்றாம் கட்ட கழக அமைப்புத் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகர பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு தாங்கள் போட்டியிட விரும்பும் பொறுப்புக்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வேட்புமனு கட்டணத்தை செலுத்தி வேட்பு மனுக்களை பெற்று பூர்த்தி செய்து ஆர்வமுடன் வழங்கி வருகின்றனர்.