கே. வி.ஆர்., நகர் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் - போலீஸ் கமிஷனரிடம் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மனு

 திருப்பூர் தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளர், திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அன்பகம் திருப்பதி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபுவை சந்தித்து  ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.


திருப்பூர் மாநகரம், மங்கலம் ரோடு, கே.வி.ஆர். நகர் அரசுநடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு பயிலுகின்றனர். மங்கலம்பிரதான சாலையிலிருந்து கே.வி.ஆர் நகர் பள்ளிக்குச் செல்லும் வழியில்அரசு மதுபானக் கடை எண். 1927 செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு செல்லும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் பள்ளி செல்லும்மாணவர்களுக்கும் வேலைக்குச் செல்லும் பொது மக்களுக்கும் இரு வேளைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேற்படி கடையை அகற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அவர்களிடம் பலமுறை ம் மனு அளித்துள்ளோம். கடையை அகற்றும் வரைகாலை மாலை என இருவேளைகளிலும் காவல் துறையினர் போக்குவரத்துநெரிசலை சீர்படுத்த ஆணையிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


 
 

Previous Post Next Post