நேபாளத்தில் தெறிக்கவிட்ட இராசிபாளையத்து வீரச்சிறுவர்கள்


ஏப்ரல் 7

கோவை சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறிய கிராமம் அரிய கிராமம் இராசிபாளையம், முன்னோர்களாலும், பக்கத்து ஊர்க்காரர்களாலும் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்ட, அழைக்கப்படும் அற்புதமான ஆற்றல் வாய்ந்த கிராமம் இராசிபாளையம் காரணம் கைத்தொழில், விவசாயம், அரசுப்பணியாளர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சுய சிந்தனை உள்ள அறிஞர் பெருமக்கள் நிறைந்து வாழும் ஊர் என்பதால் 

கடந்த ஏப்ரல் 1ம் தேதி நேபாள் தேசத்தில் ரங்கஸாலா அரங்கில், நேபாள் இன்டர்நேஷனல் ஹீரோஸ் கேம்ஸ் சாம்பியன்ஷிப் அன்ட் யூத் ஸ்போர்ட்ஸ் டெவலெப்மென்ட் பார்ம் நடத்திய,10 நாடுகள் கலந்து கொண்ட, சிலம்பம் சுற்றும் விளையாட்டு போட்டியில், கோவையைச் சேர்ந்த 14 வீரர்கள் கலந்து கொண்டனர், அதில் இராசிபாளையத்தைச் சேர்ந்த நேதாஜி மற்றும் மேக்னஸ் சிலம்ப அகடாமியின் 9 வீரர்கள் கலந்து கொண்டு 6 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை அள்ளி வந்திருக்கின்றனர் ஊரே மெச்சும்படி ,ஊரே போற்றும்படி, ஊரே வாழ்த்தும்படி என்று மகிழ்ச்சியோடு நம்மோடு செய்தியைப் பகிர்ந்தனர் இராசிபாளையம் தேவர் பேரவையின் நித்யானந்தன் மற்றும் கார்த்திக் இந்த விளையாட்டின் சாராம்சத்தைப்பற்றி மேலும் கூறுகையில், 

நமது தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம் சுற்றும் இந்த அற்புதக்கலையை கடந்த முக்கால் நூற்றாண்டாக எங்கள் ஊரில் உள்ள இளம் ஆண்,பெண் என இருவருமே இப்பயிற்சியை முறையாகக் கற்று வருகின்றனர் நேதாஜி தேகப்பயிற்சி சாலையின் மூலம் 

மேலும் கடந்த கால்நூற்றாண்டாக சிலம்பக்கலையின் ஆசான் என்று அயலூரார்களாலும் போற்றப்படும் ஆசிரியர் சந்திரன் சிலம்பம் சுற்றும் லாவகத்தையும், கைதேர்ந்த இந்த வீரவித்தையையும் இக்கால இளைஞர்களுக்கு ஏற்றாற்போல இதமாக சொல்லித்தருகிறார், அதை அப்படியே உள்வாங்கிக்கொண்ட அவரது நேரடி சீடர் பிரவீன்குமாரோ இக்கலையை வேற லெவலில் எடுத்துச்செல்கிறார்

மாவட்டம் மாநிலம் தேசம் அயல்தேசம் என்று அனைத்து நாடுகளிலும் அத்தோடு நிற்காமல் இக்கலையை உலக அரங்கில் பரப்புவதே என் ஆசானுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்றதோடு எங்களை ஊக்குவிக்கும் எங்கள் இராசிபாளையம் கிராமத்தின் பெயரையையும் உலக ஏடுகளில் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே சீடரின் ஆசை என்ற செய்தியைப் பகிர்ந்த இராசிபாளையத்தின் தேவர் பேரவையினர், ஊர் திரும்பிய வெற்றி வீரர்களுக்கு  மாலை மரியாதையோடு உற்சாகமான வரவேற்பை அளித்ததோடு மட்டும் நில்லாமல் ஒவ்வொருவருக்கும் "வீரமும் ஈரமும் இராசிபாளையத்தின்இரு கண்கள் என நேபாள தேசத்தில் நிரூபித்து,பிறந்த மண் திரும்பும் வெற்றி வீர திலகங்களை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறது தேவர்பேரவை இராசிபாளையம்"  என்ற வாசகங்கள் அடங்கிய வெற்றிக்கேடயம் கொடுத்து சிறப்பித்ததைப் பார்த்த ஊர் மக்கள் உள்ளம் நெகிழ்ந்தனர்.

Previous Post Next Post