வல்லநாடு நீரேற்று நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு.!


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீரீல் கலங்கல் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிசாமி அதிகாரிகளுடன் நேரில் சென்று வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் நீரேற்று நிலையம், நாரணம்மாள்புரம் ஆற்றுப்பகுதி ஆகியவற்றில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட காற்றாற்று வெள்ள நீர் தாமிரபரணி ஆற்றில் கலந்ததால் தண்ணீர் கலங்கலாக வருவதற்கு காரணம் என தெரியவந்தது.

இதையெடுத்து, தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வராமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 


தற்போது, சீரான மற்றும் கலங்கல் இல்லாத குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆய்வின் போது துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், உதவி ஆணையர் சரவணன், உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்

Previous Post Next Post