நினைத்தாலே முக்தி தரும் தலம் அண்ணாமலை. திருவண்ணாமலையில் மலையான நாதனாக வீற்றிருக்கிறார் சிவபெருமான். இதனாலேயே பக்தர்கள் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து சாமிதரிசனம் செய்கிறார்கள்.
இதற்காக ஒவ்வொரு பவுர்ணமியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்து கிரிவலம் செய்ய குவிவது வழக்கம். அதிலும் சித்ரா பவுர்னமி நாளில் அதிகாலை முதல் அடுத்த நாள் இரவு வரை கிரிவலப்பாதைக்கு ஓய்வில்லை எனும் அளவிற்கு பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை 3 மணியளவில் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது. பக்தர்கள் சாரைசாரையாக 14 கி.மீ., சுற்ற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் மலைவலம் சென்று வருகிறார்கள். இவ்வாறு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வந்துள்ளனர். மேலும் இன்று நள்ளிரவு வரை கிரிவலம் சென்று சாமிதரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே செய்துள்ளது.
உற்சாகமாக பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கியுள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலை கடைகளிலும் வியாபாரம் களைகட்டத் தொடங்கி உள்ளது.
-வேல்முருகன்