தூத்துக்குடியில் மணல் திட்டு அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தினமும் கலைநிகழ்ச்சிகள் சிறப்பு பூஜைகள் என நடைபெற்று 16ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. வடக்கு ரத வீதி மேலரதவீதி கீழரதவீதி தெற்கு ரதவீதி என் நான்கு வீதிகளிலும தேர் பவணி வீதிஉலா வரவுள்ளது. 

சிவன்கோவில் நிர்வாக அதிகாரி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து நான்கு பகுதிகளிலும் முழுமையாக சுத்தம் செய்து தேரோட்டம் சிறப்பாக நடைபெறுதையொட்டி உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் 

அப்பகுதியில் இடையூறாக இருந்து மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டு மேலரதவீதியில்; மணல் திட்டுகளை அகற்றும் பணியை நேற்றிரவு திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். 

அப்பகுதி முழுமையும் சுத்தம் செய்யப்பட்டு தேவையற்றவைகளை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தும் பணி இன்று அதிகாலை 5மணி வரை நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார குழு தலைவரும் கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாநகர திமுக துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், திமுக மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், 

மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், போல்பேட்டை பகுதி பிரபாகர், மற்றும் ஜோஸ்பர், மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Previous Post Next Post