உக்ரைன் போர் -புதிய தளபதியை நியமித்து புடின் உத்தரவு.!

உக்ரைன் படையெடுப்புக்குப் பிந்தைய பின்னடைவுகளுக்குப் பிறகு, ரஷ்யா புதிய உக்ரைன் போர் தளபதியை நியமித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ரஷ்யாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ், 60, சிரியா மற்றும் பிற போர்களில் பங்கெடுத்தவர், மிருகத்தனமான  ஜெனரல் என புதிய தளபதியை அடையாளம் காட்டிய அதிகாரி பேசினார். 

மாஸ்கோவின் இராணுவம் கீவ் நகரத்தை கைப்பற்றத் தவறியதால், உக்ரைனில் போருக்குத் தலைமை தாங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய இராணுவ ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவை நியமித்துள்ளார்


இது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "எந்தவொரு ஜெனரலை நியமனம் செய்தாலும் ரஷ்யா ஏற்கனவே உக்ரைனில் தோல்வியை சந்தித்துள்ளது என்ற உண்மையை அழிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.




Ahamed

Senior Journalist

Previous Post Next Post