வனப்பகுதிக்குள் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் கேட்டு மனு-நிவாரணம் பெற அரசுக்கு டி.எப்.ஓ பரிந்துரை

வனப்பகுதியில் கால் நடைகளை மேய்ப்பது,சிறு வன மகசூலை சேகரிப்பது, வனத்திற்குள் உள்ள கோயில் களில் வழிபாடு செய்வது போன்ற நடவடிக்கைகள் கால ங்காலமாக பழங்குடிகளும், இதரவனம் சார்ந்து வாழும் மக்களும் மேற்கொண்டு வருபவையாகும்.இவை,இம்மக்களின் பாரம்பரிய உரிமை.. இவ்வுரிமைகளைவனஉரிமைச் சட்டம் அங்கீகரிக்கிறது.

\

ஆனால்,இந்நடவடிக்கைகளின் போது வன விலங்குகளால் தாக்குதலுக்காளாகி மக்கள் உயிரிழந்தால் வனத்துறை நிவாரணம் கொடுக்க மறுக்கிறது.அரசு சட்ட பூர்வ மாக அங்கீகரித்த நடவடிக்கை களைவனத்துறை சட்டவிரோத மாக்குகிறது.  சத்தியமங்கலம்  டிஎப்ஓ விடம் இவ்வாறு பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத் தினர் நிவாரணம் கோரும் மனுவினை அளித்து, நிவாரணம் கிடைக்கும்வரை காத்திருப்பது என முடிவு செய்திருந்தனர் ..அதன்படி  மாவட்ட வன அலுவலகத்தில் கூடினர்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவ பாரதி, சங்க சட்ட ஆலோசகர் செ.செயராசு ஆகியோர் மாவட்ட வன அலுவலரிடம் பேசியதன் அடிப்படையில் ,அவரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் இம்மனுவிளைஅரசிற்கு பரிந்துரைப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் கலைந்து சென்றனர்.


Previous Post Next Post