கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்ச்சித்ததால் தள்ளு முள்ளு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சித்தராவுத்தன் பாளையத்தில் தண்டபாணி சுவாமி நகரில் ஐம்பத்தி ஏழு மனைப்பிரிவு உள்ள நிலையில் 1986ம் ஆண்டு 57 பேர் கிரையம் செய்துள்ளனர்.

இதில் 22 உரிமையாளர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருவதாகவும் முப்பத்திமூன்று மனை பிரிவினர் வீடு கட்ட முடியாமல் அப்படியே  காலி இடமாக வைத்திருந்த நிலையில் சிலர் அபகரித்துக்கொண்டு நிலத்தை தர மறுத்து வருவதாகவும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவும் அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு துணை போவதாக கூறி முப்பத்திமூன்று மனை பிரிவைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.  போலீசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்க முயன்றதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.




Previous Post Next Post