என் மனதில் திராவிட கருத்துக்கள் தான் இருக்கிறது - நடிகர் பாக்கியராஜ்

 மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நடிகர் பாக்யராஜ் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் வெளியாகி பெரும் பேசுபொருளாகியது. 

இந்த நிலையில், நடிகர் பாக்கியராஜ் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், ‘ மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையோடு பார்த்து வருகிறேன். குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்களை சொல்லவில்லை. அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

நான் பி.ஜே.பி., கிடையாது. எனக்கு தமிழ் தான் சோறு போடுகிறது. கலைஞர், ஜீவா, எம்.ஜி.ஆர்., எல்லாம் பார்த்து வந்ததால் அவர்கள் கருத்து தான் எனக்குள் ஊறிப்போய் இருக்கிறது. நான் எடுத்த சினிமாவிலும் திராவிட கருத்துகள் தான் எதிரொலித்து இருக்கிறது. இனிமேலும் இது தான் எதிரொலிக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

இதோ பாக்கியராஜ் பேசிய வீடியோ:




Previous Post Next Post