தூத்துக்குடி திராவிட முன்னேற்றக்கழத்தின் 15வது பொதுத்தேர்தலில் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட வார்டு கழக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மாவட்ட கழகத்தின் வேட்பு மனு விண்ணப்பபடிவங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து 30ம் தேதி மாலைக்குள் தலைமை கழக பிரதிநிதிகளிடம் விண்ணப்ப கட்டணத்துடன் வேட்பு மனுவை தாக்கல் செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை கழக உத்தரவுபடி தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் தெற்கு மாவட்ட திமுக பகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு 1, 2, 3, 12, 13, 14 ஆகிய பகுதிக்கு தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ஓன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார், ஆகியோரை நியமித்திருந்தனர்.
இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில 3வது வார்டுக்கு போட்டியிட மணிவன்னன், 2வது வார்டுக்கு சன்ராஜா, 12வது வார்டுக்கு கிஷோர், 13வது வார்டுக்கு ரவிசந்திரன், 14வது வார்டுக்கு மாரியப்பன், ஆகியோர் வேட்பு மனு விண்ணப்ப படிவத்தை வழங்கினார்கள்.
வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல ரகுராமன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் கௌதம் உள்பட பலர் உடனிருந்தனர்.