ரஷ்யாவின் பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கை உக்ரைன் தாக்கியதாக ரஷ்ய பிராந்திய அதிகாரி தகவல்.!
உக்ரைனின் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் குறைந்த உயரத்தில் பறந்து ஏவுகனை மூலம் வெள்ளிக்கிழமை ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தைத் தாக்கின என்று பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.
https://twitter.com/RALee85/status/1509763703901761556?t=9RuiD4YH3kURQZjpO_mAZA&s=19
உக்ரேனிய எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரத்தின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அதன் விளைவாக ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர், என கிளாட்கோவ் மேலும் கூறினார்.