சென்னை விமான நிலையத்திலிருந்து காமராஜர் பெயர் பலகை நீக்கம்.! - தமிழ்நாடு நாடார் சங்கங்கள் விமான நிலையத்தில் முற்றுகை போராட்டம்.!


சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து காமராஜர் பெயர் பலகை நீக்கப்பட்டதால் தமிழ்நாடு நாடார் சங்கம் விமான நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்நாட்டு விமான நிலைத்திற்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் ஏற்கனவே சூட்டப்பட்டது.இந்தநிலையில் விரிவாக்கப்பணிக்காக உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்த சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் என்கிற பெயர் பலகை அகற்றப்பட்டது. தற்காலிகமாக அகற்றப்படுவதாகவும், வேலை முடிந்த பிறகு மீண்டும் காமராஜர் பெயர் பலகை வைக்கப்படும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் இன்னும் காமராஜர் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காமராஜர் பெயர் பலகையும் அவரது உருவப்படத்தையும் வைக்க வேண்டுமென உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இன்று விமான நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர்  முத்துரமேஷ் நாடார்,பெருந்தலைவர் காமராஜர் கட்சி தலைவர் தனபாலன், சென்னை நாடார் சங்க பேரவை தலைவர் சீனிவாசன், சத்திரியா பாசறை தலைவர் ஆதித்யா சம்பத், நெல்லை - தூத்துகுடி நாடார் பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன் ஆகியோர் சென்னை விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் சரத்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது,  சென்னை விமான நிலைய இயக்குனர் விரைவில் காமராஜரின் பெயர் பலகையும், படத்தையும் வைப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் கூறும்போது,எங்கள் கோரிகையை விமான நிலைய அதிகாரிகளும், மத்திய அரசும் நிறைவேற்றவில்லை என்றால் வரும் 20ம் தேதி சென்னையில் அனைத்து நாடார்சங்களும் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.




 

 
Attachments area
Previous Post Next Post