ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கோடிபுரம் கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோடிபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள வீடுகளுக்கு மேல்நிலை தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை தொட்டி அருகே குடிநீர் குழாய்கள் செல்லும் வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை சுத்தம் செய்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.