புண்ணிய தலமான இராமேஸ்வரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாக வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் அதிகாரிகள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு, ஏராளமானோர் பங்கேற்பு.!


ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடற்கரை புனித நீராடிவிட்டு ராமநாதசுவாமி திருக்கோயிலில் வழிபட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை ஆங்காங்கே போட்டு செல்வதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக நகராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து இன்று நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி புண்ணிய தலமான ராமேஸ்வரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும், மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்படும் என்று துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அதிகாரி முன்னிலையில் உறுதிமொழியை ஏற்று பணிக்கு சென்றனர். 

மேலும் ராமேஸ்வரத்திற்கு வருகின்ற வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பொருட்களை தாங்கள் பயன்படுத்திய பின்னர் குப்பைகளை ஆங்காங்கே  போடாமல் குப்பைத் தொட்டிகளில்  போட வேண்டுமென்றும் நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

Previous Post Next Post