திருப்பூர் அமமுக கண்டன கூட்டம்

  திருப்பூர் மாநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அமமுக, சார்பில் சொத்து வரி உயர்வினைக் கண்டித்து திருப்பூர் குமரன் சிலை அருகில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்கினார். அமமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், முன்னாள் மேயர் அ.விசாலாட்சி சிறப்புரை ஆற்றினார். 


அமமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு பேசும்போது கூறியதாவது:
தமிழகத்தில் அம்முக தான் மக்களுக்காக பாடுபடக் கூடிய இயக்கம்; மக்களுக்கெதிரான அரசின் செயல்பாடுகளை தட்டிக் கேட்கக் கூடிய ஒரே தலைவர் டிடிவி தினகரன் அவர்கள். திருப்பூரை எடுத்துக் கொண்டால் கூட, இந்த தொழில் நகரம் பாதிக்கப்படக் கூடாது என்று எல்லாக்காலத்திலும் பணியாற்றக் கூடிய தலைவராக டிடிவி தினகரன் இருக்கிறார். சட்டமன்றத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் பல திட்டங்களை சொன்னார். அம்மா அவர்களின் அரசு வரி உயர்த்த முயன்ற போது முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் முக.ஸ்டாலின் தான். அன்று வரி உயர்த்தப்படவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வரி உயர்த்த மாட்டோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் வந்த உடனேயே உயர்த்தி மக்களுக்கு தண்டனை அளித்து உள்ளார்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு ஏற்றி வருகிறது. திமுக அரசு நீட் தேர்வு பற்றி பேசுகிறது; அதை தடுக்க முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கூட தில்லுமுல்லு செய்து வென்றார்கள். விவசாயிகள் சங்க தேர்தலில் கூட போட்டியிடுபவர்களை எல்லாம் நீக்கி விடுகிறார்கள். வரியை தாறுமாறாக உயர்த்தினால் மக்கள் எப்படி தாக்குப்பிடிக்க முடியும்? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாக எதையாவது பேசுகிறார்கள். 
திமுகவிடம் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும் இதை கண்டுகொள்வதில்லை. மக்கள் சிரமத்தை போக்க இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு சி.சண்முகவேலு பேசினார்.



அமமுக மாநில தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:
2021 சட்டமன்ற தேர்தலின் போது, ஸ்டாலின் வருவார் விடியல் தருவார் என்ற கோஷத்தை முன்வைத்தார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கொரோனாவில் இருந்து தமிழ்நாடு மீண்டு வரும் வரை சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு வருடம் கூட ஆகவில்லை; வரியை உயர்த்தி இருக்கிறார்கள். உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, பேசுகையில், மத்திய அரசு சொன்னதால் உயர்த்தினோம் என்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினும் அதையே சொல்கிறார். 
திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு அழைப்பினை கொண்டு போய் டெல்லியில் பிரதமரிடம் கொடுத்து விட்டு மத்திய அரசிடம் இணக்கமாக இருப்பதாக கூறுகிறார். கேரளாவில் நடந்த மாநாட்டில் பினராயி விஜயனும் நானும் ஒன்று என்கிறார். விமானத்தில் போகிற மோடிக்கு கருப்பு பலூனை பறக்க விட்டு விட்டு, டெல்லியில் போய் காலடியில் விழுந்தீர்களே எந்த வகையில் நியாயம்?
2019 ல் பழனிசாமி அரசு சொத்து வரி உயர்த்துவதாக அறிவித்த போது, ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து விட்டு, இன்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொத்து வரியை உயர்த்தினீர்கள். 
கோஷம் போடும் கம்யூனிஸ்ட்கள் 4 சீட் வாங்கி விட்டு அமர்ந்து விட்டார்கள். மதிமுகவினர் ஒன்னேமுக்கால் சீட்டு வாங்கி விட்டு ஒதுங்கி கொண்டார்கள். காங்கிரசும் 5 சீட் வாங்கி 4 தோற்று விட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இதை தட்டிக் கேட்கும் அதிகாரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு தான் உண்டு
சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார், இந்த வரி உயர்வால் 83 சதவீத மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; 17 சதவீதம் சொந்த வீட்டுக்காரர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்கிறார். 17 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா? 83 சதவீதம் பேருக்கு வீட்டு வாடகை உயராதா?
மாநகராட்சியின் மேயராக 5 வருடம் இருந்த காரணத்தால் சொல்கிறேன், வரி உயர்த்த வேண்டும் என்றால் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். நான் மேயராக இருந்த போது 10 ஊராட்சிகள் நேரடியாக மாநகராட்சியானது; அம்மாவிடம் சொல்லி பல திட்டங்களை செய்து இருக்கிறோம். 
இந்த 6 வருடங்களில் என்ன திட்டங்கள் நடந்து இருக்கிறது? ஒன்றும் நடக்கவில்லை. மாநகராட்சியில் முறையாக குப்பை அள்ளுங்கள், சாக்கடையை தூய்மை செய்யுங்கள், 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கொடுங்கள். காய்கறி சந்தை, மீன் சந்தை எல்லாவற்றையும் சரி செய்து விட்டு அப்புறம் வரி உயர்த்துவது பற்றி பேசுங்கள். 
அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் சொத்து வரியை உயர்த்தியது மாபெரும் தவறு. அடுத்து திமுக ஆட்சியில் பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை என வரிசையாக உயர இருக்கிறது. இதையெல்லாம், திமுக ஆட்சியின் அராஜகத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்கும் அருகதை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு மட்டுமே இருக்கிறது. இவ்வாறு முன்னாள் மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
முன்னதாக சொத்துவரி உயர்வினைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த நிகழ்வில் சார்பு அணி செயலாளர் சிந்து, மாவட்ட பொருளாளர் சேகர் என்கிற ஜெகநாதன், அவிநாசி நாகராஜன்,  மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கிங், மாவட்ட துணை செயலாளர் சூர்யா செந்தில், பகுதி கழக செயலாளர்கள் புல்லட் ரவி, விஜயகுமார், சத்யா, நல்லூர் ஜெகதீஷ், ஏபிடி சரவணன், கேஸ் சத்தி, மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், அன்னூர் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், நாகராஜ், ஐ.டி., விங் திலகவதி, சார்பு அணி செயலாளர் உடையாளி, ஐ.டி.விங் தெற்கு செயலாளர் பாண்டியராஜன்,மலையாண்டவர் நடராஜ், பல்லடம் ஒன்றிய செயலாளர் சதீஷ், துரைப்பாண்டி, கோமதி, மகளிரணி மகேஸ்வரி,  நகர செயலாளர் யவன கதிரவன், வட்ட செயலாளர்கள் விஜி, நல்லூர் மாரிமுத்து, சத்யா, பெருந்தொழுவு கந்தசாமி, மண்ணரை சிவக்குமார்,பொதுக்குழு உறுப்பினர் குட்வில் பழனிசாமி, வார்டு செயலாளர் மணிகண்டன், வடக்கு மாவட்ட பகுதி செயலாளர் ராஜன், சின்னையன், காஜா பாய், வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் ரத்தினசாமி, உத்திராபதி உள்பட பலர் பங்கேற்றனர். 
Previous Post Next Post