வங்கி கணக்கில் மோசடி? புகார் அளித்தால் பணம் மீட்கப்படும்: எஸ்பி பாலாஜி சரவணன் அறிவிப்பு!

வங்கி கணக்கிலிருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் இலவச தொலைபேசி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டால் பணத்தை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தற்போது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை ஓடிபி மூலமாக நடைபெறுகிறது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் மோசடியாக வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர். மேலும் இணையதளத்தில் கவரும் வகையில் போலியான பல செயலிகள் (App) உள்ளது. அதை நாம் தரவிறக்கம் செய்யும்போது நமது தொலைபேசியில் உள்ள நமது தகவல்கள் நமக்கே தெரியாமல் திருட வாய்ப்புகள் அதிமாக உள்ளது. 

இதுபோன்று OTP  மூலமாக மோசடியாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளை தரவிறக்கம் செய்து உங்கள் தகவல்கள் திருடப்பட்டாலோ அல்லது வேறு வகையிலோ நீங்கள் ஏமாற்றப்பட்டால் 24 மணி நேரத்தில் சைபர் குற்ற பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணாண 1930 ஐ தொடர்பு கொண்டு உங்கள் புகார்களை தெரிவக்கலாம். மேலும் வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக காவல் நிலையத்த்திற்கு நேரில் வராமலேயே www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் புகார்அளிக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க பெண்கள் உதவி எண் (Women Helpline) -1091, குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க குழந்தைகள் உதவி எண் (Child Helpline) - 1098, கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக புகார் அளிக்க 1093, காவல்துறையின் அவசர உதவிக்கு அவசர போலீஸ்  எண். 100,  அவசர மருத்துவ சேவை (Ambulance) -108,  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் காவல்துறையின் உதவிக்கு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கிவரும் ஹலோ போலீஸ் எண். 95141 44100 (வாட்ஸ் ஆப், குறுஞ்செய்தி உள்ளது) போன்ற எண்களில் அவரசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம  என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post