மதமாற்றத்தைத் தடுக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் ஒருங்கிணைந்து கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்தும்,  மதமாற்றத்தைத் தடுத்து தேசப்பாதுகாப்பை வலுப்படுத்தவும்  அனைத்து இந்து இயக்கங்கள் சார்பாக  சூலூர் அண்ணா சீரணி கலையரங்கம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஸினஸ் மார்க்கெட்டிங் போல ஒவ்வொரு கிறிஸ்தவ ஃபாதருக்கும் ஒரு டார்க்கெட் கொடுக்கப்படுகிறது,  இந்த மாதத்தில் இவ்வளவு பேரை மதமாற்றினால் இவ்வளவு இன்சென்டிவ்,  ஆறுமாத்தில் இவ்வளவு  நபரை மதமாற்றினால் வெளிநாட்டு டூர், ஓராண்டில் இவ்வளவு பேரை மாற்றினால் புரஃமோஷன் என ஒரு மார்க்கெட்டிங் ரெப்பரசன்டேட்டிவாக ஹார்டுஃவொர்க் பன்னி அப்பாவி மக்ககளை ஆசை வார்த்தைகளைக் காட்டி, அடித்தட்டு மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களையும் ஈஸியாக மதம் மாற்றுவது தொடர்கதையாகவே இருந்து வருவது மிகப்பெரிய அவலம் இது.

அது மட்டுமன்றி நமது அரசும் அடுத்த மதத்தினருக்கு ஓர் நீதியும்,  இந்துக்களுக்கு ஓர் நீதியுமாய் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே தொடர்ந்து செயல்படுவது புரியாத புதிராகவே உள்ளது. மேலும் விவசாய நிலங்களை தொழில் செய்வதாகச் சொல்லி  ஏமாற்றி வாங்கி, கல்லறைத் தோட்டம் என்ற பெயரில் சுடுகாட்டை மக்கள் வாழும் பூமியில் நடு ஊருக்குள் திட்டமிட்டே உருவாக்குகின்றனர் அதற்கு அரசியல்வாதிகளும் துணை போகின்றனர் .

இதைப்போன்ற அநீதிளை எதிர்த்துக் குரல் கொடுக்கும்போது மதவாத சக்திகள் மேலோங்குவதாக நமது மக்களை திசை திருப்ப அஸ்திவாரம் போடுகிறது அதிகார வர்க்கம் எனவே சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இவர்களின் செயல்பாடுகளை வளரவிட்டு வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட ,நம்மை வழி நடத்தும் தலைமையே துணைபோய்விடக்கூடாது என்று பொதுமக்கள் சார்பாக நாங்கள் அச்சப்படுகிறோம்.

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கத் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார், இந்து முன்னணி மாவட்ட தலைவர்  சுப்பிரமணியம்,  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பிஜேபி மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, காங்கேயம்பாளையம் பழனிச்சாமி, ஜெய்ஹிந்த் முருகேசன், கோவை வடக்கு மாவட்ட பிஜேபி செயலாளர் சிதம்பரம் மற்றும் இந்து முன்னணி ஒன்றிய நிர்வாகிகள் மதன்குமார் உதயகுமார் செல்வகுமார் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், சூலூர் நகர பிஜேபி தலைவர் நன்றியுரை வழங்கினார்.

Previous Post Next Post