இன்று (30ம்தேதி) கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது, இதையடுத்து கோவில்பட்டியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஆலோசனை கூட்டம் நகராட்சி சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் இன்று (30ம்தேதி) கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் ராஜாராம் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் நாராயணன் வரவேற்றார்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் கொரோனா 4ம் அலை பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் முதல் டோஸ் போட்டு விட்டு 2வது டோஸ் செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல் இரண்டு தடுப்பூசி செலுத்திய 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கோவில்பட்டி நகராட்சியை நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக்க வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றார்.
முகாமில் நகராட்சி கவுன்சிலர்கள் ஏஞ்சலா, மணிமாலா, உலகராணி, ஜேஸ்வின் லூர்துமேரி, சுரேஷ், கவியரசன், செண்பகமூர்த்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அசோகன், பொருளாளர் கண்ணன், மாநில துணைச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.