கடுமையான பணவீக்கம், எரிபொருள் விலை ,எரிவாயு விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியதற்க்கு எதிராக தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் , விவசாயிகள் ஆகியோர் போராட்டத்தில் குதித்ததால் அந்நாட்டில் கலவரம் வெடித்ததையடுத்து பெருவியன் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ செவ்வாயன்று தலைநகர் லிமாவில் ஊரடங்கு உத்தரவை விதித்தார், நாடு முழுவதும் பரவியுள்ள எரிபொருள் மற்றும் உரச் செலவுகளுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்தார்.
"அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், ஏப்ரல் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் [07:00 GMT] இரவு 11:59 மணி வரை குடிமக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது" என்று காஸ்டிலோ செவ்வாயன்று நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட உரையில் கூறினார்"
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது வாரத்தில் தொடர்ந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலகளவில் எரிசக்தி, உணவு மற்றும் உரங்களின் விலைகளை உயர்த்திய பின்னர் அரசாங்கத்தால் விலைகளைக் குறைக்க முடியவில்லை.
பொட்டாஷ், அம்மோனியா, யூரியா மற்றும் இதர மண் சத்துக்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடான ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் உரங்களின் விலைகள் அதிகரித்தன.