வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பகுஜன் சமாஜ், வேலூர் மாவட்ட தலைவர் கே.பி. சரவணன் தலைமையில் சுமார் 50 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி தாலுக்கா அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து தாசில்தார் சரண்யா, தங்களின் கோரிக்கை என்னவென்று கேட்டு, தங்களின் கோரிக்கையினை மனுவாக எழுதி கொடுக்கும் படி கூறினர். இதனை அடுத்து தாசில்தாரிடம் பொதுமக்கள் மனுவினை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு ஊராட்சி முகமதுபுரம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களான எங்களுக்கு வீடு வசதி இல்லாதவர்களில் 150 நபர்களை தேர்வு செய்து அப்போதைய அரசு கே.வி.குப்பம் ஊராட்சியில் வருவாய் துறையினர் மூலம் பட்டா வழங்கினர். இதனையடுத்து சில ஆண்டுகள் அதே பகுதியில் வீடுகள் கட்ட சென்றால் சிலர் அராஜகம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் நாங்கள் இதுகுறித்து வருவாய் துறையினர், காவல் துறையினர், ஊராட்சி நிர்வாகம், உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் அந்த சமூக விரோதிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனை பெற்று கொண்ட தாசில்தார் சரண்யா இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். உடன் தலைமையிடத்து துணை தாசில்தார் வத்சலா, வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.