தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளரும் சத்ரிய பாசறையின் மாநில பொருளாளருமான வேல்முருகன் அவர்களின் இல்ல பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அந்தவகையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் ஷத்ரிய பாசறை மாநில தலைவர் ஆதித்யா சம்பத்குமார், தாம்பரம் மாநகராட்சி 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாம்பரம் யாகூப்,தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், சென்னை நாடார் சங்க பேரவை தலைவர் சீனிவாசன், தாம்பரம் மாநகராட்சி 35வது மாமன்ற உறுப்பினர் விஜய் சங்கீதா,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.