தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் நாண்கு மண்டலம் திமுகவும் ஒரு மண்டலம் சுயேட்சை கைப்பற்றியது

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல தலைவர்களுக்கான தேர்தல் இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


ஒன்றாவது மண்டலம் :
முதல் மண்டலமான பம்மல் மண்டலத்திற்கு திமுக சார்பில் மண்டல தலைவராக வே.கருணாநிதி அறிவிக்கப்பட்டு அவரை எதிர்த்து யாரும் போட்டியிடததால் அவர் போட்டியின்றி தேர்வானார்.

இரண்டாவது மண்டலம் :இரண்டாவது மண்டலமான பல்லாவரம் மண்டலத்திற்கு வேட்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் சகோதரர்  ஜோசப் அண்ணாதுரை அறிவிக்கப்பட்டு இருந்தார் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஜோசப் அண்ணாதுரை போட்டியின்றி தேர்வானார்

மூன்றாவது மண்டலம்:மூன்றாவது மண்டலமான செம்பாக்கம் மண்டலத்திற்கு திமுக சார்பில் மகாலட்சுமி கருணாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் அவரை எதிர்த்து 40 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதீப் சந்திரன் போட்டியிட்டார் மொத்தம் உள்ள 14 வாக்குகளில் இருவருக்கும் சமமாக 7 _  7 வாக்குகள் கிடைத்த நிலையில் வெற்றியை நிற்ணயம் செய்வதற்காக குலுக்கல் முறையில் கையாளப்பட்டது.இதில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரதீப் சந்திரன் வெற்றி பெற்றார் இவர் 40 வார்டிலும் இவரது தாயார் 39வது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

நான்காவது மண்டலம்:நான்காவது  மண்டலத்திற்கு திமுக சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜாவின் மைத்துனர் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் காமராஜ் போட்டியின்றி தேர்வானார் 

ஐந்தாவது மண்டலம்:ஐந்தாவது மண்டலம் மாடம்பாக்கம் பகுதிக்கு திமுக சார்பில் இந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில் அவரையும் யாரும் எதிர்த்து போட்டியிடததால் போட்டியின்றி 5வது மண்டல தலைவராக இந்திரன் வெற்றி பெற்றார்.



Previous Post Next Post