தாளவாடி அருகே தமிழக கர்நாடக எல்லைப் பகுதி வழியாக தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்க்கு டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் குருபருண்டி,பிஸ்லவாடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் டூவிலரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திகினாரை கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பதும்,குறைந்த விலைக்கு தாளவாடி பகுதியில் ரேசன் அரிசி வாங்கி,கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து ரேசன் அரிசி கடத்திய நடராஜை காவல்துறையினர் கைது செய்து,மொபட்டில் இருந்த 200 கிலோ ரேசன் அரிசி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.