திருப்பூர் குப்பை கிடங்குகளில் மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு !!

 திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களில் குப்பை அள்ளுவதற்காக 1, 4, மண்டலத்தில் உள்ள 30 வார்டு பகுதிகளுக்கு ஓப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது 2, 3 ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள 30 வார்டுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தனது நேரடி கண்காணிப்பில் பணியாளர்களை நியமித்து குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டு வருகிறது,  இந்த நடைமுறை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது இதில் தனியாருக்கு ஓப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ள பகுதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கடந்த 2011ஆண்டு முதல் கவுன்சில் கூட்டங்களில் கவுன்சிலர்கள் பலரும் புகார் தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் புதிதாக தற்போது பதவியேற்றிருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியிலும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர். இதனைத்தொடர்ந்து  மாநகராட்சி மேயர் தினேஸ்குமார் திடீரென  மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம் பாறைக்குழி குப்பைக்கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். இதில் 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வரும் நிலையில் எத்தனை வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது எத்தனை முறை குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடப்படுகிறது, இதற்கான முறையான பதிவேடுகள் பராமறிக்கப்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் . பின்னர் எடை மேடைக்கு சென்ற அவர் அங்கு குப்பைகள் எடை போடும் பணியையும் பார்வையிட்டார் . வாகனத்தை இயக்க கூடிய ஓட்டுநர்கள் கட்டாயம் டீசல் அடித்த ரசீது , ட்ரிப் விவரம் உள்ளிட்ட விவரங்களை எப்போதும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என எச்சரித்த மேயர் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் .

 திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் இரண்டு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டபோது 10 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த பற்றாக்குறையை போக்கும் வகையில் மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் வீணாகத வகையில் இருக்க வேண்டும் எனபதற்காக இந்த ஆய்வு மேற்கொண்டிருப்பதாகவும், இனி மக்களின் வரிப் பணம் வீணாகாமல் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழுமையாக பயன்படுத்த கூடிய வகையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் . மேலும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்து வல்லுனர்களுடன் விளக்கம் கேட்டு இருப்பதாகவும் கூடிய விரைவில் எந்தெந்த வகைகளில் வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அறிக்கை தயார் செய்த தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்றபின் அந்த செயல்முறையை திருப்பூர் மாநராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கு பயண்படுத்தப்படும், அதே நேரத்தில் மாநகராட்சியின் வருவாயை பெருக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

Attachments area
Previous Post Next Post