விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. !


தொடர்விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது - பள்ளிக்கல்வித்துறை.

4 நாட்கள் விடுமுறையின்போது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை.

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் ஏப்.16 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், '2021-22ஆம் கல்வி ஆண்டில் 14.04.2022 வியாழக்கிழமையன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 15.04.2022 வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 16.4.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை முடிவுபெற்று 18.04.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4 நாட்கள் விடுமுறையின்போது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து தொடர்விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Previous Post Next Post