நெல்லையில் மோட்டார் வாகன விதி மீறல்களை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரி அதிரடி ஆய்வு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆட்டோக்களில் அதிக மாணவ, மாணவிகளை ஏற்றி செல்வதால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் செய்வதால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் நெல்லை கலெக்டர் விஷ்ணு  உத்தரவின்பேரில்  மாதாந்திர சாலை பாதுகாப்பு கூட்டத்தில் எடுத்த முடிவு படி பாளை எஸ்.பி ஆபீஸ் அலுவலகம், பாளை சேவியர் கல்லுாரி அருகில் வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில்  வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், போக்குவரத்து காவல் பிரிவு மோட்டார் வாகன ஆய்வாளர் குமார், மற்றும் அலுவலர்கள் இச்.சோகதனையில் ஈடுபட்டனர். பஸ்களை  அபாயகரமான பகுதிகளில் நின்று பள்ளி மாணவர்களை ஏற்றி இறக்கும் பஸ்களை  கண்காணித்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மாணவ மாணவிகளை அதிகமாக ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை சோதனை செய்து வாகனங்களுக்கு சோதனை அறிக்கையும் வழங்கப்பட்டது.  மேலும் மாணவ, மாணவிகளிடம் இது போன்ற அனுமதிக்கு புறம்பாக உள்ள வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது என்பதையும் மாற்று வாகனங்கள் ஏற்பாடு செய்து பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.இந்த வாகன சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Attachments area
Previous Post Next Post