அமெரிக்காவின் பிரிம்மா டெக் பிரைவேட் லிமிடெட் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உதயம்.!


அமெரிக்காவின் பிரிம்மா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மென்பொருள் மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக, மிகச்சிறந்த தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் வல்லுநர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது பிரிம்மா டெக்னோபேஷன் மையதினை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரியில் நிறுவ திட்டமிட்டு, அதன் திறப்புவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


கல்லூரி மாணவ மாணவிகள் மிகச்சிறந்த மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொள்ளவும், அவர்கள் அத்துறையில் சிறந்த வல்லுனராக உருவாக பயிற்சி வழங்கிடவும், மேலும் அவர்ககள் நல்லதோர் வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடனும், 



பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களை கல்லூரி வளாகத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் உருவாக்கவும் திட்டமிட்டு, தற்பொழுது அதன் ஒரு அங்கமாக பிரிம்மா டெக்னோபேஷன் மையம் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாஸ முருகவேல் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் நிர்வாகக்குழு உறுப்பினர் எ.நித்திஷ்ராம் மற்றும் கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பிரம்மா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் மேலும் கல்லூரியின்  முன்னாள் மாணவர் சுப்ரீ பெரியசாமி, ஆபரேஷன்ஸ் & ப்ரோக்ராம் மேனேஜ்மென்ட் லீடர் ஸ்ரீப்ரியா, யு.எக்ஸ் & கிரியேட்டிவ் டிசைன் லீடர் கோபகுமார் மற்றும் இன்ஜினியரிங் லீடர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர், இயக்குனர், முதல்வர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் முனைவர் பி.பரமசிவன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.கலைவாணி மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post Next Post