திட்டக்குடி அருகே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் பாஜக பிரமுகர் ராஜா உடையாரிடம் கோரிக்கை

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் -தொண்டங் குறிச்சி நெய்வாசல் காடு செல்லும் ரோட்டின் வழியே புல்லூர்,மேலாதனூர்,ஐவனூர்,திட்டக்குடி செல்லும் வழியாகும் தினந்தோறும் பல வாகனங்கள் செல்கின்றன வழியின் குறுக்கே ஓடை உள்ளது அப்பகுதியைச் சுற்றி சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதியை சுற்றி சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் வைத்து விவசாயம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். கழுதூர் -தொண்டங்குறிச்சி நெய்வாசல் செல்லும் பகுதியில் உள்ள ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படும் போது இவர்கள் சாலையை கடக்க முடியாமலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாமலும்,அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லமுடியாமலும் போக்குவரத்து பாதிப்பும் அவசர உதவிக்கு மருத்துவமனைக்கும் செல்லமுடியாமல் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.

 இந்நிலையில் ஓடை பகுதியில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது தற்போது அப்பாலமானது மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் நெல், கரும்பு ,மக்காசோளம், கேழ்வரகு, கம்பு ,மரவள்ளி ஆகிய தானியங்களை வெளியில் எடுத்து வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறோம் என்றும், கால்நடைகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் செல்வதற்கும்,வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம்படுகிறார்கள் என்றும் இதுபற்றி பல முறை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் மனு அளித்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும் பாரதிய ஜனதா கட்சி தென்னிந்திய பிரிவு மகாராஷ்டிரா மாநிலம் இணை ஒருங்கிணைப்பாளரும் அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவருமான ராஜா உடையார் இடம் அப்பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் சேதமடைந்துள்ள தரைபாலத்தை மேம்பாலமாக அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள் இதனை ஏற்ற ராஜ உடையார் அப்பகுதியில் உள்ள தரைப் பாலம் மற்றும் சாலையை ஆய்வு செய்தார் பின்னர் விவசாயிகள் அளித்த மனுவை பெற்றுக் கொண்டார். பின்னர் இது சம்மந்தமாக அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று  சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து போர்க்கால அடிப்படையில் விரைவில் இப்பகுதியில் சிமெண்ட் மேம்பாலம் கட்டி தருவதற்கு பெரும் முயற்சி எடுப்பதாக ராஜா உடையார்  உறுதியளித்துள்ளார். குறிப்பாக பெரியநெசலூர் - அரியநாச்சி இடையே சுமார் 100 ஏக்கர் விளை நிலத்தில்  தண்ணீர் போகாமல் தேங்கிய நிலையில் நீர் சூழ்ந்திருந்தன ஆதலால் விவசாயிகள்  இப்பகுதியில் விளைநிலங்களில் உள்ள நீர் வெளியே போக பாலம் அமைத்து தர வேண்டும் என ராஜா உடையாரிடம் கேட்டுக் கொண்டனர் அவர்களின் கோரிக்கையை ஏற்று ராஜா உடையாரின் தீவிர முயற்சியால் பெரியநெசலூர் - அரியநாச்சி இடையே புதிய பாலம் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உடனடியாக தரைபாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள்,பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் வேதனையோடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Attachments area
Previous Post Next Post