நடுரோட்டில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட போராடிய வாலிபர்...படாதபாடு பட்டு மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார்!

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டானை சேர்ந்தவர் நடராஜ். இவர் செஞ்சி நால்ரோடு பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார். இவரைப்போலவே இதே பகுதியில் தேவதானப்பட்டியை சேர்ந்த விஜிஎன்பவரும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.


இந்த வியாபாரத்தில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில், இன்று நடராஜ் மற்றும் விஜிக்கு இடையே வியாபாரம் தொடர்பாக தகராறு ஏற்ப்பட்டு உள்ளது. இதில் நடராஜுக்கு சரமாரியாக அடி விழுந்ததாக கூறப்படுகிறது. 



இதனால் கோபமும், விரக்தியும் அடைந்த நடராஜ் பிளேடை வைத்துக் கொண்டு தனது கழுத்தை அறுத்தவாறே போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தன்னை அடித்த விஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய நடராஜ் தொடர்ந்து நால் ரோடு பகுதியில் நின்று கொண்டு வாகனங்களை மறித்து, தனது கழுத்தை திரும்பத் திரும்ப அறுத்தவாறு பிரச்சினை செய்தார்.

இதையடுத்து போலீசார் திரும்ப திரும்ப அவரிடம் சமாதானம் பேசினார்கள். ஆனாலும் ஆவேசத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட நடராஜ் கதறினார்கள். செய்வதறியாது திகைத்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் நடராஜை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Previous Post Next Post