தேனி செய்தி மக்கள் துறையின் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு விழா

தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு விழா நேற்று மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.  தமிழக முதலமைச்சர்  உத்தரவின்படி 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழா தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தேனி மாவட்டத்தில் 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த  அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் இடம் பெறசெய்யப்பட்டது.

மேலும் இக்கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை காவல்துறை நகராட்சி பேரூராட்சி ஊரக வளர்ச்சித்துறை காவல் துறை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேளாண்மைத்துறை உள்ளிட்ட 32 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் காட்சிபடுத்தப்பட்டு தமிழக அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மடிப்பேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு வார காலம் நடைபெற்ற கண்காட்சியில் தினந்தோறும் பள்ளி மாணவ மாணவியர்களை கொண்டு சுதந்திர போராட்ட வரலாறு குறித்து பரதநாட்டியம் தேசிய ஒருமைப்பாடு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவ மாணவியர்களிடையே மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.  மேலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து, தாட்கோ மூலம் தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் கீழ் 29 தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிறைவு விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Attachments area
Previous Post Next Post