தலைவன் பழைய பார்முக்கு வந்துட்டாப்ள... பிரபுதேவாவுடன் சிங் இன் த ரெயின் பாடி ’வைரலாகும் வடிவேலு’

 வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே ‘குபுக்’கென்று சிரிப்பு வந்து விடும். தலைவன் அந்தளவுக்கு மொரட்டு காமெடியன்.. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக வைகைப்புயல் வடிவேலுவை தமிழ் திரையுலகம் தவற விட்டு விட்டது. அட தமிழக மக்களே ‘மிஸ் யூ தலைவா’ன்னு பீல் பண்ணத்தான் செய்யறாங்க..

சில பல காரணங்களால் அவர் நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை.  

இந்த நிலையில் தற்போது பிரபுதேவா உடன் வடிவேலு பாட்டுப் பாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.. மனதை திருடி விட்டாய் படத்தில் வருமல்லவா... ‘சிங் இன் த ரெயின்” அதே பாட்டு தான்.. தலைவர் தெறிக்க விடுறாப்ள..10 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அதே பாடி லாங்குவேஜ்.. யோவ் நீ வேற லெவல்யா...!

ஆண், பெண் பேதமின்றி உலகமெங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கும் வடிவேலு ஆர்மிக்கு இந்த வைரல் வீடியோ செம விருந்து தான்..

உன்ன சீக்கிரம் பெரிய ஸ்கிரீன்ல பார்க்கணும்.. நீ வா தலைவா..  என்று வடிவேலுவுக்கு ஆரத்தி எடுக்காத குறையாக வீடியோவை வைரலாக்கி வரவேற்பு அளித்து வருகிறார்கள். நம்மவர்கள்...

தலைவன் பழைய பார்முக்கு வந்துட்டாப்ள... ம்ம்... கிளப்புங்கள்..

Previous Post Next Post