கோவில்பட்டியில் கலைஞா் உணவகம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்.!



கோவில்பட்டியில் முதல் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தீர்மான எண் 3 கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்த அம்மா உணவகத்தை மாற்றி கலைஞர் உணவகம் செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகரமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டமானது இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் ஆணையர் ராஜாராம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் தலைவர், துணை தலைவர் மற்றும் 33 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர்கள் 32வது வார்டு உறுப்பினர் கவியரசன், 24வது வார்டு உறுப்பினர் செண்பக மூர்த்தி, 26வது வார்டு உறுப்பினர் மாரியம்மாள் நகர்மன்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படும் வகையில், 17.12.20 அன்று தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். 

தற்போது திமுக ஆட்சி வந்தவுடனே அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்த அம்மா உணவகத்தை இயங்கவில்லை. இதுகுறித்து 32வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். 

மேலும், 3-வது தீர்மானத்தில் அம்மா உணவகம் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வந்ததை தற்போது அம்மா உணவகத்தின் பெயரை நீக்கிவிட்டு கலைஞர் உணவகமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

மேலும் தொடர்ந்து அம்மா உணவகம் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்க வேண்டும். மேலும் அம்மா உணவகத்தை எடுத்து கலைஞர் உணவை மாற்றினால் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றனர்.

இதையடுத்து 32வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் தொடர்ந்து பேசுகையில் அதிமுக ஆட்சியில் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க கொண்டுவரப்பட்ட 138 சாலைகளின் பணிகள் ரத்து செய்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் நகரமன்ற கூட்டத்தின் தீர்மான நகலை ஏன் தற்ப்போதைய முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற  உறுப்பினர் கடம்பூர் ராஜூ 3. முறை தொடர்ந்து இந்த தொகுதியின் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ வழங்கப்படவில்லை என்று  கோவில்பட்டி நகர மன்ற கூட்டத்தில்  தனது கடும் எதிர்ப்பினை  நகரமன்ற உறுப்பினர் கவியரசன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post