திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தி தீர்மானம்: கட்சிகள் எதிர்ப்பு, அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

திருப்பூர் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு கமிஷனர் கிராந்தி குமார்பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். 

இந்த கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானமாக சொத்து வரி உயர்வு குறித்தான தீர்மானம் முன் வைக்கப்பட்டது. 600 சதுர அடிக் கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்க ளுக்கு 25 சதவீதம், 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்ப ளவு உள்ள குடியிருப்பு கட்டி டங்களுக்கு 50 சதவீதமும், 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரை உள்ள குடி யிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,800 சதுர அடிக்கு அதிமாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்ய லாம். வணிக நிறுவனங்க ளுக்கு தற்போதுள்ள சொத் துவரியில் இருந்து வணிக பயன்பாட்டு கட்டிடங்க ளுக்கு 100 சதவீதம் சொத்துவ ரியும், தொழிற்சாலை மற்றும் சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு தற்போ துள்ள சொத்துவரியில் 75 சத வீதம் உயர்வு செய்யலாம். காலிமனை வரிவிதிப்பு 100 சதவீதம் உயர்வு செய்யலாம் என்று தீர்மானம் வைக்கப் பட்டது.

அதிமுக., இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார்கள்.

மேயர் தினேஷ்குமார் தீர்மானத்தை விளக்கி பேசினார். அவர் பேசும்போது, ‘மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி இருப்பதால் வரி உயர்வு மூலம் வளர்ச்சிப் பணிகள் தான் செய்யப்படும். பாஜக ஆளும் மாநிலங்களை விட இங்கு வரி குறைவு என்றும் பேசினார். 
 அப்போது திருப்பூர் மாநகராட்சியின் அதிமுக குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையிலான எதிர்க்கட்சி குழு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிமுக குழு தலைவரும், 42 வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி பேசும்போது கூறியதாவது:
சொத்து வரி உயர்வு பொதுமக்களை பெரிய அளவில் பாதிக்கிறது. திருப்பூர் தொழில் நகரமாக இருக்கும் நிலையில், ஏற்கனவே பல்வேறு சிரமங்களில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சொத்து வரியை உயர்த்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார். அப்போது மேயர் உரை வாசிக்க ஆரம்பித்த நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், என்றும் அதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதனால் கவுன்சிலர்களுக்கு இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் பெரும் கோரசாக எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் மாமன்ற அரங்கம் ஏகத்துக்கும் அமளிதுமளியானது. இதைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் நடந்து கொண்டு இருக்கும் போதே மேயர் தினேஷ்குமார் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறிவிட்டு, கூட்டம் முடிவடைந்ததாக எழுந்துசென்றார். இதனால் கவுன்சிலர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தீர்மானம் நிறைவேறியது.


இதனால் அதிமுக கவுன்சிலர்கள், மேயர் தினேஷ்குமார் எதேச்சதிகார போக்குடன்மேயர் தினேஷ்குமார் நடந்து கொள்வதாக கூறி மேயரைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும் மாமன்ற கூட்ட அரங்கத்திலும், மாநகராட்சி வாசலிலும் வந்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில்  மாநகராட்சியின் அதிமுக குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சிக்குழு நிர்வாகிகளான   துணைத்தலைவர் கவுன்சிலர் சாந்தி பாலசுப்பிரமணியம் செயலாளர், கவுன்சிலர் முத்துசாமி, துணைச் செயலாளர்  தமிழ்ச்செல்வி கனகராஜ், எதிர்க்கட்சி கொறடா எம்.கண்ணப்பன்,  துணை கொறடாஆர்.ஏ.சேகர், தங்கராஜ், சின்னச்சாமி, கணேசன், புஷ்பலதா தங்கவேல், ஆனந்தி, தமிழ்ச்செல்வி, இந்திராணி ஆகியோர் பங்கேற்று கோஷமிட்டனர்.இதனால் திருப்பூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

Previous Post Next Post